நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஒன்றிய பாஜகவின் மோடி அரசாங்கம் தன்னிச்சையாக, சட்டத்திற்கு புறம்பாக, நேஷனல் ஹெரால்டு சொத்துகளை கையகப்படுத்த முயற்சிப்பதோடு, அன்னை சோனியா காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில், தெற்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோவிந்தராஜன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள காதிகிராப்ட் முன்பாக இன்று நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக், மாவட்ட பொருளாளர் முரளி, ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா படேல் ஆகியுயோர் கண்டன உரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகிகள் ராஜலிங்கம், அப்துல் இப்ராகிம், வல்லபாய் படேல், அலங்காரம், ஹக்கீம், அன்பு ஆறுமுகம், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் திரளாக கலந்துகொண்டனர்.