திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமை இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி அளித்தனர்.
அதப்போது ஸ்ரீரங்கம் 2-வது வார்டு கொள்ளிடக்கரை கமலா நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கடந்த பல மாதங்களாக இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை சீர் செய்யப்படாமல் கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்று நோய்களும் ஏற்படுகிறது.
இது குறித்து ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி மற்றும் இப்பகுதி கவுன்சிலர் ஜவகர் ஆகியோரிடம் பலமுறை கூறியும் அதேபோல் ஸ்ரீரங்கம் தாசில்தாரிடம் மனு அளித்தோம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இப்பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக் கோரி இன்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம் என தெரிவித்தனர்.