திருச்சி எடமலைப்பட்டி புதூர் குட்டி மலை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குடிசை வீடு கட்டி வசித்து வருகின்றனர் இதே பகுதியில் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் இருந்து ஏற்றி செல்லப்படும் ஜல்லி கற்களால் அப்பகுதி முழுவதும் மண் துகள்கள் குவிந்து கிடப்பதால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் முதியவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் இதே பகுதியில் மற்றொரு குவாரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. மேலும் இந்த குவாரியில் இருந்து ஜல்லிக்கற்கள் எடுத்து செல்லும் லாரிகளால் இப்பகுதியில் அதிகப்படியான மண் துகள்கள் வீடுகளை பணி போர்வை போல் மூடி விடுகிறது. மேலும் இந்த மண் துகள்களால் உணவுப் பொருட்கள் மற்றும் முதியவர்கள் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு சுவாசிப்பதில் சிரமமும் தொற்று நோய்களும் ஏற்படுகிறது . நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் குவாரியில் பாறைகள் உடைத்த பொழுது அதில் இருந்த ஒரு கல் வயதான ஒருவரின் காலில் பட்டு விபத்துக்குள்ளானது மேலும் இந்த மண் துகள்களால் ஒருவருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள், கவுன்சிலர் உள்ளிட்ட பலரிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் தேர்தலின் போது மட்டுமே வேட்பாளர்கள் இப்பகுதியில் வந்து வாக்கு கேட்டு செல்வதாகவும் தங்களின் கோரிக்கைகளான சாலை வசதி மின்சார வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட ஒரு அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றித் தரவில்லை எனவே வருகிற 2024 திருச்சி பாராளுமன்ற தேர்தலில் இப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என பதாகைகளை ஏந்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.