தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 3 என்பதை பால் கொள்முதல் குறையாமல் இருக்கவும் தனியார் நிறுவனங்களின் போட்டிகளை சமாளிக்கவும் மேல்மட்ட அதிகாரிகள் அவர்கள் வழிகாட்டுதல்படி கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் 2025 பிப்ரவரி மாதம் வரை சங்க பணத்திலிருந்து ஊக்க தொகை வழங்கப்பட்டுள்ளது தற்போது பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை ஆவின் மூலமாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் மணப்பாறை ஐலாப்பேட்டை புங்கனூர் கோப்பு பெட்டவாய்த்தலை உள்ளிட்ட பல சங்கங்கள் பெரும் இழப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே சங்கத்தின் மூலம் வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை சங்கங்களின் பெயர்களுக்கு வழங்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர்.