பால்பண்ணையிலிருந்து துவாக்குடி வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது அதில் தெரிவித்திருப்பதாவது:- பால்பண்ணையிலிருந்து துவாக்குடி வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கக் கோரி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறோம். பால்பண்ணையிலிருந்து துவாக்குடி வரை ‘அணுகு சாலை ( Service Road ) அமைத்தால். சாலையின் இரு மறுங்கிலும் வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகள், மக்களுக்கு பயன்தரக்கூடிய பலவிதமான நிறுவனங்கள். தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி தொழிலாளர்கள் அனைத்தும் இழந்து வாழ்வாதாரத்தை தொலைத்து வீதிக்கு வரக்கூடிய நிலைமை ஏற்படும்.

துவாக்குடி அருகில் புறவழிச்சாலை (Ring Road ) வழியாக திருச்சி. தஞ்சை மார்க்கமாக வரக்கூடிய பேருந்து மற்றும் கனரக வாகனங்களை அந்த வழியாக அனுமதித்தால் வெகுவாக போக்குவரத்து நெரிசல் என்பது குறையும். விபத்தும் அதிகப்படியாக இருக்காது. ஆகவே தொழிலாளர்களின் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பால்பண்யிைலிருந்து துவாக்குடி வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அரசிற்கு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் வைக்க வேண்டுமென்றும், அரசு அதை நிறைவேற்றி தரவேண்டும் என்றும் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என நம் மனதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *