பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் பாஜக மாவட்ட அலுவலகத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் அமைப்பு பணிகள் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பங்களிப்பு குறித்து தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன் மற்றும் திருவாரூர் மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாவட்ட செயற்குழுவில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் காளீஸ்வரன் ஒண்டி முத்து தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:-தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தி பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தடையை நீக்கி உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எடுத்த முயற்சிக்கு இந்த மாவட்ட செயற்குழு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் மத்திய பேருந்து நிலையம் அருகில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு காலத்திற்கு மேலாகியும் திறக்காமல் உள்ள நிலையில் விரைவில் பெரும்பிடுகு முத்திரையர் மணிமண்டபத்தை திறக்க வேண்டும் என இந்த மாவட்ட செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த மாநகர் மாவட்ட செயற்குழுவில் மாவட்ட செயற்குழு ஏற்பாட்டு குழுவினர் மாவட்டத் துணைத் தலைவர்கள் மாவட்டச் செயலாளர் சிறுபான்மை அணி மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்சி அணி மாவட்ட தலைவர் மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கான பிரிவு தலைவர் தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவர் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் அனைத்து மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் அணி பிரிவு மாவட்ட தலைவர்கள் மண்டல தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.