வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச மாதஊதியம் 26 ஆயிரம் வழங்க வேண்டும் ,நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 13அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் ஐக்கிய முன்னனி சார்பில் திருச்சி தென்னூர் அரச மரத்தடியில் நடைபெற்றது
இந்த பிரச்சார கூட்டத்திற்கு தொமுச பேரவை செயலாளர் ஜோசப் நெல்சன் தலைமை தாங்கினார். அதேபோல் திருச்சி உறையூரில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். தொமுச தொழிற்சங்க மாநில செயலாளர் எத்திராஜ் ,ராஜேந்திரன் ஏஐடியுசி மாவட்டத் தலைவர்நடராஜா, துணைத் தலைவர் சிவா
மற்றும் சிஐடியு சார்பில் பொதுச் செயலாளர் ரங்கராஜன் துணைத் தலைவர் ஜெயராமன் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் செழியன் உள்ளிட்டோர் உரையாற்றினர். பிரச்சாரக் கூட்டம் மற்றும் மக்கள் சந்திப்புபிப்ரவரி 12மத்திய பேருந்து நிலைய பகுதியிலும், பிப்ரவரி 14 சத்திரம் பேருந்து நிலைய பகுதிகளும் வரை நடைபெற்று16ஆம் தேதி முழு வேலை நிறுத்தம்-மறியல் மாவட்ட, வட்டார, ஒன்றிய தலைநகரங்களில் நடைபெறுகிறது.