திருச்சி மாவட்ட ஏஐடியுசி கவுன்சில் கூட்டம் மாவட்டத் தலைவர் நடராஜா தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் சுரேஷ், மாவட்டத் துணைத் தலைவர்கள் ஜனசக்தி உசேன், சிவா மாவட்டச் செயலாளர்கள் முருகன், கங்காதரன் போக்குவரத்து கார்த்திகேயன், அன்பழகன் கட்டுமானம் செல்வகுமார் பெல் தொழிலாளர் சங்கம் லோகநாதன், அமைப்புசாரா சின்ன காளை உள்ளிட்டோர் பங்கு பெற்றனர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக:-

ஒன்றிய மோடி அரசின் நிதிநிலை அறிக்கை உழைக்கும் மக்களை கொள்ளையடிக்கும் கொள்கைகள் தொடர்வதை கண்டித்தும், மத்திய தொழிற்சங்கங்கள் முன்வைத்த எந்த ஒரு கோரிக்கையும் இடம்பெறாத மக்கள் விரோத, தொழிலாளர் விரோத பட்ஜெட்டை கண்டித்து வருகிற பிப்ரவரி 6ம் தேதி அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தையொட்டி திருச்சி தொலைதொடர்பு தலைமை அலுவலகம் முன்பாக காலை 10.30மணியளவில் நடைபெறும் பெரும்திரள் போராட்டத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் பெருமளவில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. அனைத்து துறைகளிலும் பிப்ரவரி 10 – 17 வரை பிரச்சாரக் கூட்டங்கள், துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பதிலும் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *