திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளரும் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும் கர்நாடக காங்கிரஸ் கட்சி செயலாளருமான சாஹிர் சனதி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறிய போது…. தற்போது முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருவதாகவும் தெற்கு மாவட்டத்திற்கு தலைவர் தேர்ந்தெடுக்க வந்திருப்பதாகவும் கட்சியில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பாகுபாடு இன்றி பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் மேலும் கட்சியை வளப்படுத்துவதற்கு என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டும் என மேற்கொள்ள உள்ளதாக கூறினார்..

மேலும் பீகார் தேர்தல் தோல்வி குறித்து கேள்வி எழுப்பியதற்கு வாக்கு திருட்டு மூலமாக பாஜக கூட்டணி வெற்றி பெற்றதாக கூறினார் மேலும் தமிழகத்தில் கூட்டணியில் ஆட்சியில் பங்கு குறித்து கேள்வி எழுப்பியதற்கு தான் பொறுப்பாளராக வந்திருப்பதாகவும் இதுகுறித்து தலைமை மேலிடம் தான் கூற வேண்டும் என கூறினார் பேட்டியின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில நிர்வாகிகள் மாங்குடி எம்எல்ஏ . கார்த்திக் தங்கபாலு. திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சி தலைவர் விச்சு. முன்னாள் கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம். மற்றும் நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர்
