திருச்சி மாநகர் சிஐடியு ஆட்டோ, சாலைப்போக்குவரத்து அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் சார்பில் 2019 புதிய சாலை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரியும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், ஆன்லைன் அபராதத்தை தடுக்க கோரியும், அபராத கட்டணங்களை அடுத்தடுத்து உயர்த்தி இன்சூரன்ஸ் எப்சி கட்டணங்களை உயர்த்துவதை உடனடியாக நிறுத்த கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி பாராளுமன்றத்தை நோக்கி ஒரு லட்சம் ஓட்டுனர்கள் பேரணியாக செல்கின்றனர் அதற்கு ஆதரவாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது .
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் ரங்கராஜன் மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர் சிஐடியு ஆட்டோ, சாலைப்போக்குவரத்து அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.