2022-ம் ஆண்டு புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை திருச்சி மெகா ஸ்டார் எதிரே உள்ள இந்திய மருத்துவ மன்ற வளாகத்தில் இன்று துவங்கியது. இந்த விற்பனை கண்காட்சியை மாவட்ட கலெக்டர் சிவராசு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். புத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கங்களின் கைதேர்ந்த கைத்தறி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி ரக துணிகளின் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை இன்று 29-12-2021 முதல் துவங்கி வருகிற 12-01-2022 அன்று வரை 15 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த விற்பனை கண்காட்சியில் பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், பெட் சீட்கள், போர்வைகள், தலையணை உறைகள், அலங்கார விரிப்புகள், ஜமுக்காளம், பருத்தி சேலைகள், லுங்கிகள், பாலி காட்டன் சேலைகள், கோரா சேலைகள், மென்பட்டு சேலைகள், திரைச்சீலைகள் மற்றும் துண்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் 30 சதவீதம் அரசு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் ரவிக்குமார் செய்திருந்தார்.