உடல் நலக்குறைவு காரணமாக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த 21-ம் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கிறிஸ்தவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் அவரது மறைவையொட்டி திருச்சி மாவட்டம் மேலப்புதூர் பகுதியில் உள்ள புனித மரியன்னை பேராலயத்தின் சார்பில் பங்குத்தந்தை அருள்பணி சவரிராஜ் மற்றும் உதவி பங்கு தந்தை அருள் பணி சகாய ஜெயராஜ் ஆகியோர் தலைமையில் பங்கு தந்தையர்கள், துறவத்தார் மற்றும் பங்கு மக்கள் ஆகியோர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்று அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.