திருச்சி உறையூர் பாண்டமங்கலம் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வேந்திரன். இவரது மகன் தீபக் (வயது 27).இவர் ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்து கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஓராண்டாக தீபக் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றார். இருந்தபோதிலும் வயிற்று வலி தீரவில்லை.அதைத் தொடர்ந்து வாழ்க்கையில் விரக்தி அடைந்த தீபக் ஏற்கனவே இருமுறை தற்கொலைக்கு முயன்று உள்ளார். பெற்றோர்கள் அவரைக் காப்பாற்றினர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் அவருக்கு வயித்து வலி ஏற்பட்டது. இதையடுத்து அருகாமையில் வசிக்கும் தனது மாமனார் சுப்பிரமணியன் என்பவரது வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு அறையில் தீபக் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.இது தொடர்பாக அவரது தந்தை செல்வேந்திரன் உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.