பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்துவோம் என்ற தேர்தல் அறிவிப்புடன், தமிழகத்தில் ஆட்சியமைத்த விளம்பர திமுக அரசு கடந்த ஆண்டு மரக்காணத்தில் கள்ளச்சாராயத்தால் 14பேர் உயிரிழந்தநிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் 63பேர் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். ஆனால் தற்போது திமுக அரசு சட்டசபையில் பூரணமதுவிலக்கை அமல்படுத்த சாத்தியமில்லை என்று கூறி, மதுவிலக்கு திருத்த சட்டத்தினை அமல்படுத்தியுள்ளது.

தொடர்ந்து கள்ளச்சாராய உயிரிழப்புகளிலிருந்து பாடம் கற்காமல் தமிழகத்தை போதையின் பாதைக்கு கொண்டு செல்லும் திமுக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் இன்றையதினம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழகம் தழுவிய அளவில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கண்டண ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் படி திருச்சி மத்திய பேருந்துநிலையத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், கள்ளச்சாராய ஒழிப்பில் கடமை தவறிய அதிகாரிகளை தண்டிக்கவும், கஞ்சா வியாபாரிகள் மீது இரும்புக்கரம் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் பைஸ் அஹமது தலைமையில், நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் ஜெய்னுலாபிதீன் மற்றும் பலரும் பங்கேற்று கண்டண உரைநிகழ்த்தியதுடன், பூரண மது விலக்கு கோரி கண்டண முழக்கமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் வர்த்தகர்கள், மனிதநேய மக்கள் கட்சியினர் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *