அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பென்ஷன் தொகைக்கு இணையான பென்ஷன் தொகையை பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கும் மாற்றம் செய்து தர வேண்டும் என கோரி திருச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவலக வளாகத்தில் பி எஸ் என் எல் ஓய்வூதியர்கள் கவன ஈர்ப்tபு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் வரவேற்புரை ஆற்றிட மாவட்ட தலைவர் சித்தி ராஜ் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில சிறப்பு அழைப்பாளர் ஜெயகணேஷன், புதுகை மாவட்ட கிளை செயலாளர் மில்டன் ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினார். கடந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி முதல் கட்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக ஜனவரி 17-ம் தேதி தர்ணா போராட்டம் நடத்தினர்.
3-ம் கட்டமாக இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு இணையான பென்ஷன் மாற்றம் தேவை என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது இறுதியாக மாவட்டத் துணைத் தலைவர் கமலநாதன் நன்றி உரையாற்றினார்.