திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் காட்டூர் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி காட்டூர் பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திரா தோழி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரீஸ்வரி ராமர் வரவேற்புரை ஆற்றிட திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் கவுன்சிலருமான ரெக்ஸ் தலைமை தாங்கினார்.
காட்டூர் கோட்ட தலைவர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் கோட்டத் தலைவர் அழகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய தேசிய காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் கிரிஸ்டோபர் திலக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிகளுக்கு இடையே நடந்த பேச்சுப்போட்டி, ஓவியபோட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் பாட புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த பொதுக்கூட்டத்தில் கலை பிரிவு மாவட்ட தலைவர் அருள், எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் கலியபெருமாள், விவசாய அணி மாவட்ட தலைவர் அண்ணாதுரை இளைஞர் காங்கிரஸ் காட்டூர் கோட்டத் தலைவர் ஜோன்ஸ் பிராங்க் உள்ளிட்ட காட்டூர் கோட்டை காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.