திருச்சி மாநகரத்தில் இன்று பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350-வது சதயவிழா அரசு விழாவாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருச்சி மாநகர ஒத்தக்கடை சந்திப்பில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அமைச்சர்கள் கே என் நேரு, மெய்ய நாதன், அரசு அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார் அதனை தொடர்ந்து மாலை ஏழு மணி அளவில் திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருக்கு வீரவால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள் கே என் நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்ய நாதன், ரகுபதி மற்றும் எம்எல்ஏக்கள், கட்சியினர் உடன் இருந்தனர்.