ஆழிசூழ், பூவுலகில் பாரத தேசத்தின் தக்ஷண பாகத்தில் சித்தர்களும் ஞானிகளும் உலாவும் காவிரி, கொள்ளிடம் ஜீவநதி பாயும் ஸ்ரீரங்கம் சேத்திரத்தின் வடபால் மண்ணச்சநல்லூர் அருகே இனம்கல் பாளையம் ஊராட்சியில் கோரக்க சித்தர் அருளாசின் படி சித்தர்கள் முறைப்படி வடிமைக்கப்பட்ட வட்ட வடிவ தர்ப்பை புல் கூரையுடன் அமைக்கப்பட்ட மூலஸ்தானதில் அமைந்துள்ளது அருள்மிகு காலபைரவர் அன்னை வாராஹி அம்மன் ஆலயம்.
தமிழகத்தில் எங்கும் இல்லாத ஓர் அமைப்பாக காசிக்கு அடுத்தபடியாக இனாம் கல்பாளையத்தில் உள்ளபைரவர் வனத்தில் பைரவர் வாராகி அம்மனுக்கு தனி மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது.பக்தர்களுக்கு கேட்ட வரம் கொடுத்து அருள் பாலிக்கிறார். இக்கோயிலில் இராகு கால பூஜை,மாலை 6 மணி பூஜை என இரண்டு கால பூஜை நடைபெற்று வருகிறது. இக்கோயில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன்அமைக்கப்பட்டுள்ளது
அதில் காசியில் உள்ள 8 பைரவர் ஸ்தலத்திலிருந்தும் வாராகி அம்மன் ஆலயத்தில் இருந்தும் பிடி மண் எடுத்துவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.108 சிவாலயங்களில் இருந்து பிடி மண் எடுத்து நவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் முதல் காசி வரை சென்று புனித நீர் கொண்டு வந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வட்ட வடிவிலான மூலஸ்தானம் பித்ரு வழி சாபம் பிரேத சாபம் மற்றும் முன்னோர்கள் வழிபாட்டிற்கு உகந்தது பஞ்ச பூத ஸ்தலங்களில் இருக்கும் சலவிரிச்சா பிடிமன் கொண்டு வந்து இங்கு உள்ள மகா வில்வம் நடப்பட்டுள்ளது ஏழரை சனி அஸ்தம சனி மற்றும் ராகு கிரம பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு.
இந்நிலையில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றது. இதில் 108 மூலிகைகள்,திரவிய பொருட்கள், மாதுளை,வெண்கடுகு உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவர்,வாராகி அம்மனை தரிசனம் செய்தனர்.