திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) கட்சியின் டெல்டா மண்டல நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், கட்சியின் தலைவர் ஜிகே.வாசன் தலைமையில் நடைபெறுகிறது. முன்னதாக ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்… இயக்கத்திற்கு வலுசேர்க்கும் வகையில் உறுப்பினர் சேர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு. வருகிறது. சட்டமன்றத்தில் தமாகவின் குரல் வலுவானதாக இருக்கும்.அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரத்தை அரசுக்கு நினைவுபடுத்த வேண்டியது எதிர்கட்சிகளின் கடமை. அரசு உண்மை நிலையை வெளிக் கொண்டுவர வேண்டும். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு விசாரணையில் அரசு ஏதேனும் மறைக்க நினைத்தால் அதனை மக்களுக்கு தொடர்ந்து நினைவூட்டுவது எதிர்க்கட்சிகள் கடமை ஜனநாயக ரீதியாக போராடுபவர்களை கைது செய்வதன் மூலம் எதிர்க்கட்சிகளின் குரலை அரசு ஒடுக்கிவிட முடியாது. புயல், கன மழையால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு. அரசு இழப்பீட்டை இன்னும் வழங்கவில்லை.

ஏக்கர் ஒன்றுக்கு நெற்பயிருக்கு 35,000 ரூபாய், தோட்டப்பயிர்களுக்கு 25,000 ரூபாய் வழங்க வேண்டும். பயிர்க் காப்பீட்டுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முழுமையான நிதியை ஒதுக்க வேண்டும். சட்டமன்றத்தில் தமாகவின் குரல் பலமாக ஒலிக்கும் நோக்கில் 2025ஆம் ஆண்டில் தொடர் களப்பணிகள் நடைபெறும். தனியார்க்கு மனமகிழ் மன்றம் என்ற பெயரில் FL2 மதுபான கடை உரிமம் தருவதை அரசு நிறுத்த வேண்டும். பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தான் தமாகவின் நிலைப்பாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *