திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மேளவாடி பகுதியை சேர்ந்த தம்பதி ஷானவாஸ், ரிகானா . இவர்களது ஒரே மகள் ரோஸ்னி பானு. இவர் தனியார்(செல்லம்மாள்) பள்ளியில் 12 வகுப்பு பயின்ற 597 மதிப்பெண்கள் எடுத்து திருச்சி மாவட்டத்தில் முதல் இடத்தை பெற்றார். அதனை தொடர்ந்து மாணவி ரோஸ்னி பானு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து இருந்தார். இந்நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.
இந்த பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மேல வாளாடி பகுதியை சேர்ந்த ரோஸ்னி பானு மாநில அளவில் 3ம் இடம் பிடித்துள்ளது. இதுகுறித்து மாணவிரோஸ்னி பானு அளித்த பேட்டியில்..மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த எனது தாய் தந்தை மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தக் கல்லூரியில் சேர்வது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
வருங்காலத்தில் ஐஏஎஸ் படிப்பு படித்து மாவட்ட ஆட்சியராக வரவேண்டும் என்பது என்னுடைய ஆசையாக உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பில் *திருச்சி மாவட்டத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன்* என்னை அந்த அளவிற்கு யாரும் பாராட்டவில்லை அது எனக்கு சிறு வருத்தமாக இருந்தது இருப்பினும் தற்பொழுது பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் *தமிழ்நாட்டில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது* எனக்கு மேலும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது என தெரிவித்தார்.