யாவரும் சமூக அமைப்பு, திருச்சி மாவட்ட காவல் துறை மற்றும் அரசு சையது முர்தசா மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. பேரணியை காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் சுகுமாரன் தொடங்கி வைத்தார்.
இப்பேரணியானதுதிருச்சி மரக்கடை அருகே உள்ள அரசு சையது முர்தசா மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி காந்தி மார்க்கெட், ஜெயில் பேட்டை வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இபேரணியில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்களை எழுப்பியவாறு பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், காவல் துறையினர் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.