மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை தடுத்து அமைதியை நிலை நாட்டு தவறிய பாஜக ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளை கண்டித்து அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் சார்பில் திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமாதானம் ஒருமைப்பாட்டு கழகத்தின் மாவட்ட செயலாளர் மணிமோகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில துணைத்தலைவர் செல்வராஜ் துவக்கி வைத்து பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவா, திருச்சி தமிழறிஞர் திருக்குறள் முருகானந்தம்,
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில பொருளாளர் இப்ராகிம், தமிழ்நாடு இலக்கிய பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் ஆநிரை செல்வன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இறுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமி நன்றி கூறினார்.