மணிப்பூர் மாநிலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கலவரத்தால் உடைமைகளை இழந்து, உறவுகளை இழந்துவாடும் கிறிஸ்தவ மக்களுக்கு ஆதரவாகவும், மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டியும்
பொன்மலை புனித சூசையப்பர் திருத்தல பங்குத்தந்தை சகாய ஜெயக்குமார் தலைமையில் பள்ளி மாணவிகள், அருட் சகோதரிகள், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தினர்,
பங்கு பேரவையினர் என 400க்கும் மேற்பட்டோர் பொன்மலை ஆரோக்கிய மாதா கெபியில் இருந்து புனித சூசையப்பர் ஆலயம் நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர்.