மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீது நடைபெற்ற கொடுஞ்செயலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக பாலக்கரை ரவுண்டானாவில் இன்று (சனிக்கிழமை )காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் குலாம் தஸ்தஹீர் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் கண்டன உரையாற்றினார். இக்கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்திற்கு ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தங்களது கண்டன குரல்களை வெளிப்படுத்தினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜாகீர், பொருளாளர் லால் பாஷா, துணைத் தலைவர் காஜா, துணைச் செயலாளர்கள் உமர், பிலால், ரசூல், கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியில் மாவட்ட செயலாளர் ஜாகிர் நன்றியுரை வழங்கினார் .