மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் கலவரத்தையும் பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வல்லுறு செய்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்காத ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில பிஜேபி அரசை கண்டித்தும் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் விவசாய சங்கம் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் திருச்சி தலைமை தபால் நிலையம் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு DYFI மாவட்ட தலைவர் லெனின், மாதர் சங்க மாவட்ட தலைவர் பொன்மகள், தீ ஒ முன்னணி மாவட்ட தலைவர் கனல் கண்ணன், SFI மாவட்ட தலைவர் சூர்யா, விவசாய தொழிலாளர் சங்க தலைவர் தங்கதுரை, ஆகியோர் தலைமை வகித்தனர், தீஓமுன்னணி மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன், விச மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி, ரேணுகா,
SFI மாவட்ட செயலாளர் மோகன், DYFI மாவட்ட செயலாளர் சேதுபதி, மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த முற்றுகை போராட்டத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் படு பாதக செயலில் ஈடுபட்ட கயவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி மத்திய மற்றும் மணிப்பூர் அரசுகளை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.