திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தையின் கட்சியின் மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினருமான ஜவகர்,
மற்றும் காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் கோவிந்தராஜ் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாமன்ற உறுப்பினர் பைஸ் அகமது ஆகியோர் மாநகராட்சியின் அலுவலகம் முன்பு கருப்பு சட்டை அணிந்து கைகளில் மணிபூருக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.