திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள வருமான வரித்துறை  அலுவலகத்தில் சம்பளம் பெறும் ஊழியர்கள் வருமான வரி தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரை மண்டல முதன்மை ஆணையர் வசந்தன், வருமானத்துறை அதிகாரிகள் நித்தியா, ராஜாராஜேஸ்வரி, கருப்புசாமி பாண்டியன் ஆகியோர் பங்கேற்று வருமான வரி செலுத்துவது தொடர்பான ஆலோசனை வழங்கினர். இந்த நிகழ்வில் தபால் துறை, ரயில்வேதுறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறையை சேர்ந்த சம்பளம் பெறும் ஊழியர்கள் பங்கற்றனர். அதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை மதுரை மண்டல ஆணையர் வசந்தன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் போது அதில் ஒரு பகுதி வரியாக TDS பிடிக்கப்படுகிறது. இதை திரும்ப பெறுவதற்காக சிலர் சட்டப்படி எல்ஐசி பணம் செலுத்துவது போன்று கொடுத்து திரும்ப பெறுகின்றனர். எங்களுக்கு வந்த தகவலின் படி டேக்ஸ் ரிவிஷன் பண்ணுகிறார்கள் TDS ஐ தவறான வழியில் பெறுகின்றனர். இதற்காக ஏற்கனவே பிப்ரவரி மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திப்பட்டது‌. இதுவரை நான்காயிரம் பரிவர்த்தனைகள் தவறாக நடைபெற்று இருப்பதை கண்டு பிடித்துள்ளோம் அவர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே மக்கள் தவறாக பரிவர்த்தனை செய்திருந்தால் வருமான வரித்துறையில் உள்ள நடைமுறையை பயன்படுத்தி ரிட்டன் பைல் பண்ணலாம் என தெரிவித்தார்..அப்படி செலுத்தி விட்டால் அவர்களுக்கு கூடுதல் வரியோ, அபராதமோ அல்லது தண்டனை தவிர்க்கப்படலாம். கடந்த ஆண்டு மதுரை மண்டலத்தை பொறுத்தவரை 20 மாவட்டங்களில் உள்ளடக்கியது. இதில் ரூ.6632 கோடி வசூல் செய்யப்பட்டது. இதில் திரும்பி கொடுத்தது 3526 கோடி. 52 சதவீதம் மொத்த வசூலில் 32 சதவீதம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்