தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் , நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்க துறை சார்பில் மண்ணச்சநல்லூர் மற்றும் முசிறி ஒன்றியங்களை சார்ந்த கூடப்பள்ளி மற்றும் 97 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் 73.97 கோடி செலவில் பணிகள் முடிக்கப்பட்டு இன்று துவங்கப்பட்டது தொடர்ந்து சனமங்கலம் ஊராட்சியில் ஜே ஜே எம் திட்டத்தில் தனி நபர் இல்ல வீட்டு குடிநீர் இணைப்பு மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டு 120 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா எம் ஆர் பாளையத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். .தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் மற்றும் முசிறி ஒன்றியம், கூட பள்ளி மற்றும் ஏழு கிராம குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் 73.97 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு இன்று துவங்கி வைக்கப்பட்டது இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் கே என் நேரு பேசுகையில். 1972ம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்த போது குடிநீர் வளங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நீரை சுத்திகரிப்பு செய்து வழங்கும் திட்டமும் கலைஞர் துவங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இந்த திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் பார்த்து வந்த துறை என்பதால் நிதி அதிகமாக வழங்கி உள்ளார். 4.4 கோடி மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 2008 mlt லிட்டர் 5 கோடி பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. 3 ஆண்டு காலத்துல 3.75 கோடி மக்களுக்கு இந்த குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் போர் போடும்போது நிலத்தடி நீர் குறையும் என்று மக்களால் நிறைய பிரச்சனைகள் வருகிறது. அதையும் எதிர்கொண்டு வருகிறோம். ஜல்ஜீவன் ஜீவன் திட்டத்துக்கு 1000 கோடி தேவை என்றால், 800 கோடி தமிழக முதல்வர்தான் கொடுக்கிறார்கள். மத்திய அரசு 100, 200 கோடி தான் கொடுக்கிறது. 2024-25க்குள் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 7.5 கோடி பேருக்கு குடிநீர் வழங்கப்படும். குளித்தலை, மருங்காபுரி பகுதியில் 1000 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் நடைபெறுகிறது.
1கோடியே 16 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு உள்ளது. காலை உணவு திட்டம்,இலவச பேருந்து என பல திட்டங்கள் தமிழக முதல்வர் கொடுத்து உள்ளார். மெட்ரோ உள்ளிட்ட பணிகளுக்கு மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. நிதி நெருக்கடி உருவாகி உள்ளது. அதிக நிதி நெருக்கடிகளும் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. நிதியை பெற வேண்டும் என்ற முயற்சியை எடுத்துள்ளோம். கண்டிப்பாக நிதியை பெறுவோம். புதிய பேருந்து முனையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு திருச்சிக்கு 4000 கோடி ரூபாய் தமிழக முதல்வர் கொடுத்துள்ளார். 15 மாநகராட்சியாக இருந்தது, தற்போது 25 மாநகரட்சியாக உயர்த்தப்பட்டு உள்ளது, என பேசினார். இந்த விழாவில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன் ஸ்டாலின் குமார் சௌந்தர பாண்டியன் கதிரவன் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.