மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தலை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி மாவட்ட மக்கள் அதிகாரம் சார்பில் திருச்சி தென்னூர் அரசமரம் பஸ் ஸ்டாப் அருகே மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாவட்ட பொருளாளர் கார்கி தலைமை தாங்கினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்ட செயலாளர் ஜீவா மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் செழியன், ஜனநாயக இஸ்லாமிய பேரவை மாநில துணை செயலாளர் அசரப் அலி, ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மாபா சின்னதுரை ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர். இறுதியாக மக்கள் அதிகாரத்தின் குழு உறுப்பினர் வெங்கடேஷ் நன்றியுரை ஆற்றினார்