தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மண்டலம் சார்பில் மத்திய அரசின் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இன்று மாலை மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அப்துல் சமத் தலைமையில் திருச்சி ஆர்சி மேல்நிலைப்பள்ளி அருகே இருந்து 500-க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.
இந்த முற்றுகை போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் இப்ராஹிம் அஷ்ரப் அலி இலியான் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தஞ்சை பாதுஷா மகளிர் பேரவை மாநில பொருளாளர் சான் ராணி அலிமா கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம் எல் ஏ அப்துல்சமது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது
வக்பு வாரியத்தின் மூலமாக இந்த சொத்துக்களை பாதுகாக்க கூடிய உரிமையை அரசியல் சாசன சட்டம் 26 இந்த நாட்டில் வாழக்கூடிய சிறுபான்மை மக்களுக்கு வழங்கியிருக்கிறது அந்த சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடக்கூடிய அளவிற்கு ஒரு சட்டவிரோத சட்டத்தை இன்றைக்கு ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது இந்த சட்டத்தை எதிர்த்து ரத்து செய்ய வேண்டும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்சியில் இன்று மத்திய அரசின் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தார்.