எஸ்ஆர்எம்யூ மற்றும் ஏஐஆர்எப் திருச்சி கோட்டம் அனைத்து கிளைகள் மற்றும் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பாக திருச்சி ரயில்வே ஜங்ஷன் டிஆர்எம் அலுவலகம் முன்பாக மத்திய அரசை கண்டித்து எஸ்ஆர்எம்யூ மாநில துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:- தொழிலாளர் விரோத நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை வாபஸ் பெற கோரியும், 2023 முதல் வழங்க வேண்டிய சி ஆர் சி பதவி உயர்வுகளை அனைத்து கேட்டகிரிகளுக்கும் காலதாமதமின்றி வழங்கிட கோரியும், எட்டாவது ஊதிய குழுவை உடனே அமைத்திட கோரியும், மூன்று லட்சத்திற்கு மேலான காலி பணியிடங்களை நிரப்பிட ஆர் ஆர் பி மற்றும் ஆர் ஆர் சி தேர்வுகளை நடத்திட கோரியும், ரயில்வே தனியார் மயம், அவுட் சோர்சிங் நடவடிக்கைகளை கைவிட கோர்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.