மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரில் உள்ள காதி கிராப்ட் முன்பு கருத்துரிமையை நசுக்கும் மத்திய அரசை கண்டித்து மக்கள் அதிகாரம் மாநகர செயற்குழு உறுப்பினர் நிர்மலா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் 48பத்திரிக்கையாளர்கள் வீடுகளில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு அச்சுறுத்தல் கொடுத்ததும், நியூஸ் க்ளிக் பத்திரிக்கை அலுவலகத்திற்கு பூட்டு போட்டு ஆசிரியர் மற்றும் நிர்வாகிகளை உபசட்டத்தில் கைது, ஆந்திராவில் மனித உரிமை செயல்பட்டார்கள், வழக்கறிஞர்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டு அவர்களை மிரட்டியதை கண்டித்தும், மேலும் உபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், என் ஐ.ஏ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பை கலைத்திடவும், இதுவரை பொய் வழக்குகளில் கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையை மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் செழியன், தமிழக விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் இந்திரஜித், மக்கள் கலை இலக்கிய கழக மாவட்ட செயலாளர் ஜீவா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட மேற்கு மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ்,இஸ்லாமிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஜனநாயக பேரவை மாநில துணை தலைவர் அஷ்ரப் அலி, மக்கள் கழக இலக்கிய கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் கோவன், மாசிஸ் லெனின்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தேசிகன் மற்றும் மக்கள் அதிகார நிர்வாகி செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.