திருச்சி மண்ணச்சநல்லூர், கிழக்கு ஒன்றியம் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் 100 நாள் வேலை உறுதித் திட்ட நிதி ரூ.4000 கோடியை தமிழ்நாட்டிற்குத் தராமல் ஏழை எளியோர் வயிற்றில் அடிக்கும் மோடி அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் கே பி ஏ செந்தில்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என் அருண் நேரு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கிராம பகுதி மக்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒன்றிய மோடி அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.. இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கதிரவன், அவைத்தலைவர் அம்பிகாபதி, நகர செயலாளர் சிபிடி ராஜசேகர், வி எஸ் இ இளங்கோவன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..