மருத்துவ காப்பீட்டு திட்ட பணியாளர்கள் நல சங்கத்தின் வாழ்வாதார பாதுகாப்பு முதல் மாநில மாநாடு இன்று திருச்சியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,சட்டமன்ற குழு தலைவர் ராமச்சந்திரன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் குணசேகரன் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் குமார், பொதுச் செயலாளர் பொன்னிவளவன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் மாநில தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சரத்குமார் முன்னிலை வகித்தார்.தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில்..இந்த முதல் மாநாட்டை நடத்தும் மருத்துவ காப்பீட்டு திட்ட பணியாளர்கள் 6 கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இந்த 6 கோரிக்கைகளும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் இதை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். காப்பீட்டை செயல்படுத்தக்கூடிய பணியாளர்களின் ஊதியம் ஆனது 15,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது எனவே இதை அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். எனவே அந்த பழைய ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் அதேபோல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறிப்பாக 12 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்ற கூடியவர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கிறோம்.இந்த காப்பீட்டு பணியாளர்கள் தங்களுடைய கோரிக்கையை முன்வைக்கும் விதமாக ஒரு சிறிய முயற்சி எடுத்தாலும் அந்த முயற்சிக்கு முட்டுக்கட்டையாக அந்தந்த அரசு மருத்துவமனைகளில் உள்ள முதல்வர்கள் உடனடியாக அந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்கின்றனர். எனவே இந்த பணியாளர்கள் ஒரு அச்சத்தோடு வாழக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சியில் அரசுக்கு தெரியாமல் அதிகாரிகள் இப்படி நடவடிக்கை எடுப்பது தெரியாமல் தொடர்ந்து பலர் பலி வாங்கப்படுகின்றனர்.பணியாளர்கள் என்பது நிரந்தரமாகவோ அல்லது ஒப்பந்த அடிப்படையில் அல்லது தினக்கூலியாகவோ எப்படி வேண்டுமானாலும் பணியாற்றலாம் ஆனால் தங்களுடைய கோரிக்கையை முன் வைப்பதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு அந்த உரிமையை யாரும் மறுக்கக்கூடாது. அந்தக் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் தான் மிக சிறப்பான சேவையை கடந்த கொரோனா காலங்களில் செய்து வந்துள்ளது குறிப்பாக இந்தியாவில் உள்ள பல்வேறு நோயாளிகள் நம்முடைய தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தான் சிகிச்சைக்காக வருகின்றனர். குறிப்பாக கொரோனா காலங்களில் தனியார் மருத்துவமனைகளை விட அரசு மருத்துவமனைகளை மிக சிறப்பான சேவையை வழங்கி உள்ளது. இவ்வளவு சிறப்பான சேவையை வழங்க முடிகிறதுக்கான முக்கிய காரணம் அங்கு பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் செவிலியர்கள் மட்டுமல்ல அவர்களைத் தாண்டி பணியாற்றக்கூடிய மற்ற பல்நோக்கு பணியாளர்களும் காரணம், எனவே அப்படிப்பட்ட பணியாளர்கள் மூலம் நற்பெயரைப் பெற்றுதந்த அரசு மருத்துவமனை பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும்.அதில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட பணியாளர்களின் ஊதிய குறைப்புக்கு வழிவகுக்கும் அரசாணை 219 ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் வார்டு மேலாளர்களுக்கு அடிப்படை ஊதியம் 20,000 ஆகவும் டையாலிசிஸ் டெபினிஷன் கேத் லாப் டெக்னீஷியன்ஸ் அடிப்படை ஊதியம் 18,000 ஆகவும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு 16,000 ரூபாயாகவும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.வருடாந்திர ஊதிய உயர்வு 5% ராயல் டிப் போனஸ் வழங்கப்பட வேண்டும் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு காலம் வரை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும் .
ஆளுநர் ரவி வகிக்கும் மிக உயரிய மற்றும் கவுரவமான பொறுப்பு அந்த பொறுப்பிற்கு உரிய முறையில் அவர் நடந்து கொள்ளவில்லை.அவர் ஒரு ஆர் எஸ்எஸ் என்ற அமைப்பை சேர்ந்தவராகவும் பாஜகவின் மிகச்சிறந்த தொண்டராகவும் இருந்து வருகிறார். எனவே அவர் தன்னுடைய ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தன்னுடைய கட்சிக்கு சிறப்பாக தொண்டு செய்யட்டும். சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் நீட் தேர்வு விலக்கு மசோதா, இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினை அல்ல என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் அதிலும் திமுக கொடுத்ததாலேயே அவர் நிராகரிக்கிறாரா என்று தெரியவில்லை இதே கோரிக்கையை அதிமுகவும் கொடுத்திருக்கிறது எனவே கட்சி சார்ந்து அல்லாமல் இது திமுகவோ அதிமுகவோ கம்யூனிஸ்டோ வைக்கக்கூடிய கோரிக்கை அல்ல என்பதை புரிந்து கொண்டு இது ஒரு பொதுவான கோரிக்கையை என்பதால் அதை நிறைவேற்றிட ஆளுநர் முன் வர வேண்டும். நாட்டிலேயே மிகச்சிறந்த மருத்துவத்தை கொடுப்பது தமிழ்நாடு அதில் அதிகமான மருத்துவ கல்லூரிகளை கொண்டிருப்பதும் தமிழ்நாடு, அதில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் ஆரம்பித்து மருத்துவக் கல்லூரியில் பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் வரை எந்த நீட் தேர்வை எழுதி அவர்கள் மருத்துவர்கள் ஆனார்கள். நீட் தேர்வு எழுதினால் தான் ஒரு தகுதியான மருத்துவ மாணவனை தேர்வு செய்ய முடியும் என்பது ஒரு அப்பட்டமான பொய், இது ஒரு திசை திருப்பும் நடவடிக்கை, இதில் அதிக அளவில் பயனடைபவர்கள் கோச்சிங் சென்டர்கள் தான், இந்த கோச்சிங் சென்டர் மூலம் சேர்ந்து படிக்க குறைந்த பட்சம் 20 லட்சம் ரூபாய் செலவாகிறது. எனவே இந்த போட்டி அரசாங்கத்தை ஆளுநர் நடத்திக் கொண்டிருக்கிறார் எனவே அது உடனடியாக அவர் கைவிட வேண்டும் ஒரு பொதுவெளியில் நான் நீட் தேர்வு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என்று கூறுவது அபத்தமானது அவருக்கு அதில் கருத்து முரண்பாடுகள் இருந்தால் அதை கடிதமாக எழுதி முதல்வருக்கு அனுப்பட்டும் என்று கூறினார். நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவம் கடுமையான கண்டனத்திற்குரியது.பட்டியலினத்தை சேர்ந்த மாணவன் சின்னதுரை அந்த பள்ளியில் நன்றாக படிக்கக்கூடிய மாணவர், வகுப்பில் இந்த மாணவர் நன்றாக படிக்கிறார் இவரை போல அனைவரும் படிக்க வேண்டும் என்று ஆசிரியர் ஒரு பொதுவான நோக்கத்தில் சொன்னதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு அந்த சின்னதுரை என்ற மாணவர் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தி அவருடைய தங்கையையும் அரிவாளால் வெட்டி ஒரு ஆதிக்க சாதியினர் செய்துள்ளனர்.இதைப் பார்த்த உறவினர் அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்திருக்கிறார் இது வருத்தத்திற்குரியது என்றும் இந்த தாக்குதல் கண்டனத்திற்கு உரியதும் என்று கூறினார். எனவே அரசும் உடனடியாக பிரச்சனைகள் தலையிட்டு முதலமைச்சர் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயாரிடம் பேசியுள்ளார்.இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மணிப்பூர் சம்பவத்துடன் இதை ஒரு ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.