மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளையொட்டி அதிமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் தில்லை நகர் 7-வது கிராஸ் பகுதியில்
மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா படத்துக்கு அதிமுக பகுதி செயலாளர் எம் ஆர் முஸ்தபா தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் ஐயப்பன், பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி மற்றும் திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.