திருச்சிராப்பள்ளி மாநகராட்சி முன்னாள் மேயரும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 31 வது வார்டு காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினருமான சுஜாதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இருதயத்திற்கு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் ரெக்ஸ், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் லெனின் பிரசாத், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளரிடம் கூறுகையில்: காங்கிரஸ் பேரியக்கத்தின் மாமன்ற உறுப்பினரும் முன்னாள் மேயரும் திருச்சி காங்கிரசின் தூணாக விளங்கிய சுஜாதா மரணம் அடைந்துள்ளார்
நம்பிக்கையோடு பணியை துவங்கியவர் அன்பாக பழகக் கூடியவர் அப்படிப்பட்ட அன்பு சகோதரியை காங்கிரஸ் பேரியக்கம் இழந்துள்ளது அவரது குடும்பத்தாருக்கும் திருச்சி காங்கிரஸ் தோழர்களுக்கும் ஆழ்ந்த வருத்தம் நான் இங்கேயே இருந்து இறுதியாத்திரையில் கலந்து கொண்டு அடக்கம் செய்யும் வரை நானும் தோழர்களும் இருப்போம் என தெரிவித்தார்