மலேசியாவில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந் நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன், இலங்கை கிழக்கு மகனா மேனாள் ஆளுநர் செந்தில் தொண்டைமான் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இலங்கையை தொடர்ந்து மலேசியாவில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். மலேசிய நாட்டில் இந்தியவை சேர்ந்த வம்சவளி இளைஞர்கள் அதிக கால்நடை வளர்த்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி இதுவரை 250 ஜல்லிக்கட்டு காளைகள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து மலேசிய நாட்டில் மூன்று லட்சம் தமிழர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்தப் போட்டியில் மலேசியாவில் பணிபுரியும் தமிழர்கள் கலந்து கொள்வார்கள். மலேசியா நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான புதிய அனுமதி பெறுவதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கான உரிய பயிற்சியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளோம். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனுமதி மற்றும் வரைமுறைகள் இந்தியாவில் இருப்பது போன்று இலங்கையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. அதேமுறையை மலேசிய நாட்டிலும் மேற்கொள்ளப்படும். முதன்முறையாக மலேசியாவில் நடைபெற உள்ள இந்த ஜல்லிக்கட்டிற்கு தமிழக முதல்வருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த பேட்டியின் போது தமிழக ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ஒண்டி ராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *