திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை மலேசியா செல்ல இருந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பயணி ஒருவர் தனது உடல், உள்ளாடை,மொபைல், பர்ஸ் மற்றும்
கால் பாதத்திற்கு அடியில் மறைத்து வைத்து எடுத்துவரப்பட்ட ஒரு லட்சத்து 8 ஆயிரம் சவுதி ரியால் இந்திய மதிப்பில் ரூ.23 லட்சத்து 11 ஆயிரம் வெளிநாட்டு கரண்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.