திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து குமுளூர் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.வணிகவியல் பேராசிரியர் வினோத்குமார் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கடந்த 2 மாதங்களுக்கும் பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் பேராசிரியர் வினோத்குமார் வணிகவியல் துறையில் பயிலும் மாணவிகளுக்கு செல்போன் மூலம் ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். மேலும் அவரது அறைக்கு மாணவி வர சொல்லி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை சக மாணவிகள் என்ன செய்வது என்று தெரியாமல் பேசிக் கொண்டிருந்தபோது அதை வகுப்பில் பயிலும் மாணவர்களிடம் இந்த மாணவிகள் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேராசிரியர் வினோத்குமார் இடம் கேட்டபோது உங்கள் வேலையை பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் பேராசிரியர் வினோத்குமாரை தர்ம அடி கொடுத்தனர். இச்சம்பவம் குறித்து லால்குடி சரக காவல்துறை கண்காணிப்பாளர் அஜய்தங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியர் சுப்பிரமணியன் 20க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாடம் சொல்லி தரும் பேராசிரியர் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் கொடுத்து தர்மஅடி வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.