திருச்சி மாவட்டம் புறநகர் பகுதியான லால்குடி பகுதியில் மாற்றம் அமைப்பு மற்றும் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் விளையாட்டு குழுவினர் சார்பில் நமது இந்திய நாட்டின் 77 வது சுகந்திர தினம் சிறப்பாக கொண்டாப்பட்டது நம்முடைய நாடு சுகந்திரம் பெற பல தலைவர்கள் போராடி பலர் உயிர்தியாகம் செய்து நமக்கு இந்த சுதந்திரத்தை பெற்று தந்தனர் அவர்களின் தியாகம் விலைமதிப்பற்றது எனவே நாம் ஒவ்வொருவரும் நமது நாட்டின் முன்னேற்றத்திற்க்காக பாடுபட வேண்டும் ஜாதி மதம் மொழி இனம் என்கிற எந்த பகுபாடுமில்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.
நாட்டின் முனேற்றதிற்க்காக இணைந்து பாடு பட வேண்டும் மேலும் நாம் இந்த இயற்கையை பாதுகாத்து மரங்களை வளர்த்து சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டும் என்று நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர் இந்நிகழ்வில் மாற்றம் அமைப்பின் நிறுவனரும் தேசிய விருது பெற்ற குறும்பட நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் அவர்கள் கலந்து கொண்டு இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் பழ வகைகளான மரகன்றுகளை வழஙங்கினார்.
இந்நிகழ்வில் அமைப்பின் நிர்வாகிகள் விளையாட்டு பிரிவு செயலர் சுரேஷ் பாபு வழக்கறிஞர் ஆறுமுகம் இணை செயலர் எழில் மணி மகளிர் பிரிவு செயலர் வழக்கறிஞர் கார்த்திகா இணை செயலர் அல்லி கொடி சுபாஷ் ,கண்ணா, அஜித்,கணிஷ்,திலீப், சரண்,பிரபு, மதன்,மணி,பாண்டி, அஜய்,தர்ஷன் சத்தியேந்திரன், ராஜேஸ்வரி,கீர்த்தி, நாககண்ணி,சகுந்தலா,கணகவள்ளி,மற்றும் கலைபுயல் கபாடி குழு பாய்ஸ் விளையாட்டு குழுவினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரகன்றுகள் வழங்கப்பட்டு அப்பகுதியில் மரகன்றுகள் நடப்பட்டது.