திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் நிதியுதவியுடன் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சார்பில் சிறப்பு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் ஒரு நாள் கல்வி சுற்றுலாவிற்கான வாகனத்தை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலமாக மாற்றுத்திறனாளிகளின் நல நிதி உதவியுடன் வருடம், வருடம் அரசு சார்பில் கல்வி இன்ப சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது. இந்த சுற்றுலா மூலம் மாற்றுத்திறனாளி மாணவர்களின் மனச்சுமையை குறைப்பதற்காக கல்வி இன்ப சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது, இந்த சுற்றுலாவில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள், அறிவு சார் குழந்தைகள், மூளை வளர்ச்சி ஒன்றிய குழந்தைகள், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பார்வை திறன், செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் என மொத்தம் திருச்சி மாவட்டத்தில் உள்ள 6 மையங்களில் இருந்து 120 குழந்தைகள் இந்த இன்ப சுற்றுலாக்கு பெற்றோர்களுடன் அழைத்து செல்லப்பட்டனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த சுற்றுலா வாகனம் தஞ்சாவூரில் உள்ள முக்கிய ஸ்தலங்களை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சுற்றி காட்ட உள்ளது. இதில் பயணம் செய்த மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் சந்தோஷத்துடன் பயணத்தை மேற்கொண்டனர். இந்த சுற்றுலா வாகனத்தில் பயணம் செய்த மாற்றுத் திறனாளி மாணவ மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இக்கல் கல்வி சுற்றுலாவை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக அரசிற்கு நன்றியை தெரிவித்தனர்.இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரவிச்சந்திரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், உரிமைகள் திட்ட உதவி செயல்படுத்தும் அலுவலா ரமேஷ், உள்ளிட்ட சிறப்பு பள்ளிகளின் நிர்வாகிகள்,சிறப்பு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.