திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் டாக்டர் கலைஞர் அவர்களின் 100- ஆண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில் நெறி மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் எம்ஆர்எப், டிவிஎஸ், உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட முன்னணி மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்றனர்..இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தேர்வு பெற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கி பாராட்டினார்..
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகர மேயர் அன்பழகன், மாவட்ட வேலை வாய்ப்பு துணை இயக்குனர் மகாராணி, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்..