தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ், கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்ப்போம் என்ற முழக்கத்துடன் ஒதுக்காதீர் ஒதுக்காதே மாற்றுத்திறனாளிகளை ஒதுக்காதீர், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியபடி பள்ளியில் பயிலும் எட்டாவது மற்றும் ஒன்பதாவது பயிலும் மாணவ மாணவிகள் பேரணியாக சென்றனர் இந்த பேரணியானது பள்ளியில் இருந்து துவங்கி கள்ளத்தெரு, புது தெரு, பெரிய மிளகு பாறை மெயின் ரோடு வழியாக மீண்டும் பள்ளியை வந்து அடைந்தது.
இந்த பேரணியில் ஆசிரியர் பயிற்றுனர் முனைவர் முஜம்மில் கான், மாற்றுத்திறனாளிகள் சிறப்பாசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.