மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாளை முன்னிட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள கி.ஆ.பெ விஸ்வநாதன் தொடக்கப் பள்ளியில் இளைஞர் பெருமன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமையில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மாணவர் பெருமன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெய்லானி வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் திமுக மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன், திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் குமரவேல், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சுரேஷ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவா, மாணவர் பெருமன்ற மாநில தலைவர் இப்ராகிம், அபிஷேகபுரம் கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் செல்வகுமார், பொருளாளர் சொக்கி.சண்முகம், மேற்கு பகுதிச் செயலாளர் சுரேஷ் முத்துசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்கப்பட்டு செயலாளர்கள் முருகன், அஞ்சுகம், பார்வதி, இளைஞர் பெருமன்றம் தினேஷ் குமார், விஸாவா, சூர்யா, பாட்ஷா, தர்மராஜன், மகேந்திரன், மாணவர் பெருமன்றம் விஷ்வா, சையது பைசல், அருள் தனசேகரன், மாதர் சங்க நிர்வாகிகள் சுமதி, ஆயிஷா, புஸ்பம், ஈஸ்வரி, மருதாம்பாள் இறுதியாக மணிகண்டம் ஒன்றிய செயலாளர் இன்னசென்ட் விமலா மேரி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் அளித்தனர். மேலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் முருகன் தனது குடும்பத்தினரோடு பங்கேற்று இரத்தம் அளித்தார்.