தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தென்னூர் மின்சார வாரியம் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார் மண்டல செயலாளர் ஆலயமணி, மண்டல செயலாளர் கவிதா, செயலாளர் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் கண்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக :- மின்சார திருத்த மசோதா 2025 மத்திய அரசு கைவிட கோரியும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும், காலி பணியிடங்களை ஐடிஐ படித்தவர்கள் கொண்டு நிரப்பிடக்கோரியும்,

தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் பண்டகக்காப்பாளர் நிலை இரண்டு பதவிகளை உள்முகத் தேர்வு மூலம் முறையாக நிரப்ப கோரியும், ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை தூரிதப்படுத்தி உடனடியாக முடிவுக்கு கொண்டு வரக் கோரியும், இடைக்கால நிவாரணமாக மாதம் ரூபாய் 5000 வழங்கிட கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வருத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
