திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜீவ் காந்தி விவசாயம் செய்து வருகிறார். குமுளூரில் தனக்கு சொந்தமான இடத்தில் மாட்டு பட்டி அமைத்து 4 மாடுகள் வளர்த்து வருகிறார். மேலும் அதற்கு தேவையான 100 வைக்கோல் கட்டுகள் அடுக்கி வைத்துள்ளார். சம்பவம் நடந்த நேற்று மாலை மழை பெய்வது போல் மின்னல் காணப்பட்டுள்ளது .
மாட்டின் பட்டிக்கு அருகே ராஜீவ் காந்தி சென்ற போது திடிரென பலத்த சத்தத்துடன் இடி மின்னல் சத்தம் கேட்டபோது தனது மாட்டு பட்டியின் மீதும், மரம் மற்றும் வைக்கோல் மீது தீ பிடித்து எரிந்துள்ளது. ராஜீவ் காந்தி அருகே சென்றபோது 4 மாடுகளும் மின்னல் தாக்கிய போது பலியாகியது தெரியவந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அனைக்க போராடி உள்ளனர்.
தகவலறிந்த புள்ளம்பாடி தீயணப்பு மீட்பு படையின் நிலைய அதிகாரி பாரதி தலைமையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர் மேலும் மேலும் சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரைண நடத்தி வருகின்றனர். இடி மின்னல் தாக்கி பலியான மாடுகள் மற்றும் வைக்கோல் ரூ 3 லட்சத்திற்கும் மேல் சேதமாகி உள்ளதாக கூறப்படுகிறது.