தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி இன்று தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி, உறையூர் நாச்சியார் கோவில் தெருவில் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேசன் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று பொருட்களை வழங்கி பயனாளிகளுடன் கலந்துரையாடினர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், நகர் ஊரமைப்பு குழு உறுப்பினர் வைரமணி, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், பொது வினியோக திட்ட துணைப்பதிவாளர் மாரிச்சாமி, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்க பணியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள். அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.