தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை திருச்சி மாவட்ட பிரிவு சார்பில் 25 கோடி பரிசு தொகை காண தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி, நீளம் தாண்டுதல் போட்டி, சிலம்பம் சுற்றுதல், உயரம் தாண்டுதல் போட்டி, குண்டு எறிதல் போட்டி, வாலிபால் போட்டி மற்றும் கபடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த போட்டிகளில் திருச்சி மாவட்ட அளவிலான பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மாற்றுத்திறனாளிகள் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண்கள் பெண்களுக்கு தனித்தனியாக மொத்தம் 50 வகையான போட்டிகள் கடந்த 12ஆம் தேதி முதல் தொடங்கி வருகிற 28ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.