தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கல்விக்கு மட்டுமல்லாமல் விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து, மாணவ, மாணவிகள், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவித்திடும் வகையில் விளையாட்டுத் துறைகளில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன், மூலம், தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பெருமளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்து வருகிறார்கள்.இளைய சமுதாயத்தினரின் அறிவு வளர்ச்சியை மட்டுமல்லாது அவர்களது உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, உடல் நலம் ஆகியவற்றையும் பேணி பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் அளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை காண கேரம் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்ணன் உள்ளிட்ட விளையாட்டு துறை அலுவலர்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *