திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்களின் 72 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி திமுக தெற்கு மாவட்டம் மலைக்கோட்டை பகுதி 12 மற்றும் 12 அ வட்ட திமுக சார்பில் தெருமுனை கூட்டம் மேல சிந்தாமணி பகுதியில் இன்று நடைபெற்றது இந்த தெருமுனை கூட்டத்திற்கு பகுதி கழக செயலாளர் மோகன் வரவேற்புரை ஆற்றினார் 12 வது வட்டக் கழக செயலாளர்கள் சிவக்குமார் மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்.
விழாவில் திமுக தலைமை கழக செய்தி தொடர்பு துணை செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி, மாநகரக் கழக செயலாளர் மதிவாணன், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் துணை மேயர் திவ்யா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மண்ணை அரங்கநாதன் சபியுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த தெருமுனை கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது கூட்டத்தின் இறுதியாக 12வது வார்டு மாம் என்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் நன்றியுரை ஆற்றினார்.